விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் ஊராட்சியில், கால்நடை துறை சார்பில் கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ துவக்கி வைத்தார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர், திண்டிவனம் கோட்ட கால்நடை துணை இயக்குனர், கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.