கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள, டி. அத்திப்பாக்கம் பகுதியில் உள்ள திருச்சபையில் நாளை கிறிஸ்மஸ் விழாவையொட்டி, இன்று (டிசம்பர் 24) கேக் வெட்டி வனத்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்து கூறினார். அப்பொழுது அவருக்கு பங்கு தந்தைக்கு கூட்டி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர். உடன் மாவட்ட செயலாளர் பொன். கௌதமசிகாமணி, ஒன்றிய செயலாளர் தங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.