விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் திண்டிவனம்-செஞ்சி ரோடு உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் திண்டிவனம், வேப்பஞ்சாலை தெரு, பத்மநாபன் மகன் ஆனந்தன் (வயது 50) என்பதும் செல்போன் மூலமாக கேரளா மாநில லாட்டரிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.