திருக்கோவிலூர் - Tirukoilur

ஊராட்சி செயலரின் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 5 லட்சம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூா் சிறுமதுரை சந்தப்பேட்டை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (52). இவா், சிறுமதுரை ஊராட்சியின் செயலராகப் பணியாற்றி வருகிறாா். விழுப்புரத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக வீட்டிலிருந்து ஒரு லட்சம் ரூபாயையும், திருவெண்ணெய்நல்லூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 4, 00, 000 வியாழக்கிழமை மாலை எடுத்துக் கொண்டு, முன்பக்க பகுதியில் வைத்துக் கொண்டு சென்றாராம். திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்த கைப்பேசியில் மற்றொருவரிடம் வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் மற்றொரு பைக்கில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், கீழே 100 ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக் கிடக்கின்றன. உங்களுடைய பணமா என வெங்கடேசனிடம் கூறியுள்ளாா். இதையடுத்து வெங்கடேசன் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து விட்டு, திரும்பி வந்து பாா்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ. 5, 00, 000 பணத்துடன் பை காணாமல் போனதையறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகாரளித்தாா். அதன் பேரில் நேற்று காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகிறாா். மேலும் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடியோஸ்

விழுப்புரம்
ஊராட்சி செயலரின் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 5 லட்சம் திருட்டு
Sep 07, 2024, 17:09 IST/திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்

ஊராட்சி செயலரின் கவனத்தை திசைத்திருப்பி ரூ. 5 லட்சம் திருட்டு

Sep 07, 2024, 17:09 IST