விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியில், பூக்கடை, பழக்கடை வைத்துள்ளவர்களுக்கு, திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில், முன்னாள் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராகவன் ஏற்பாட்டில், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் பெரியளவிலான குடை வழங்கினர். இந்த நிகழ்வில் செயலாளர் கோத்தம்சந்த், பொருளாளர் சௌந்தர்ராஜன், நிர்வாகிகள் முத்துகுமாரசாமி, முன்னாள் ராணுவ வீரர் கல்யாணகுமார், ஆர்சிசி நிர்வாகிகள் சிதம்பரநாதன், தேவிபாலமுருகன், குருமூர்த்தி, ஹரிகிருஷ்ணன், உள்ளிட்டோர் இருந்தனர்.