விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு, அரசு சார்பில் ₹. 10, 000 நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் குறிபிட்ட சில குடும்பத்திற்கு மட்டும் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.