

அரகண்டநல்லூர் பகுதியில் தமிழக முதல்வர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் பகுதியில், புயலின் காரணமாக மழைநீரானது பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புகுந்து 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியது, இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி மற்றும் அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.