“அரையாண்டுத் தேர்வு தேதியில் மாற்றம்?’ - அமைச்சர் விளக்கம்

51பார்த்தது
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வு வருகிற 9ஆம் தேதி முதல் நடைபெறும். டிச.9ஆம் தேதிக்குள் வெள்ளம் பாதித்த பள்ளிகளில் இயல்பு நிலை திரும்பாவிடில் மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரம் தேர்வு நடைபெறும்” என்றார்.

நன்றி: News18TamilNadu

தொடர்புடைய செய்தி