ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்துக்கு உட்பட்ட வாழப்பட்டாம்பாளையம் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீட்டில் தீப்பந்தம் ஏற்றி வைத்து மக்கள் தவிக்கின்றனர்.