நடிகர் நாகர்ஜுனாவின் மூத்த மகனான நடிகர் நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இன்று மாலை (டிச. 04) நடைபெற்றது. முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யா நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார்.