ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 110 உதவி மேலாளர்கள் பணி இடங்களை நிரப்பவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 19 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு குழு விவாதம், நேர்காணல், மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆரம்ப ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/gicionov24/