பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்-ஐ கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். அகாலிதளம் கட்சியின் முந்தய ஆட்சியில் செய்த தவறுகளுக்காக சுக்பீ சிங் பாதலுக்கு, சீக்கிய அமைப்பு மத தண்டனை விதித்தது. இதனால், அவர் பொற்கோயிலில் தூய்மை மற்றும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.