திருவண்ணாமலை கடந்த டிச.1ஆம் தேதி தீப மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிருடன் புதைந்தனர். இதையடுத்து, 3 நாட்களாக அவர்களை மீட்கும் பணி தொடர்ந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு 7 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், அவர்களது உடல்களுக்கு திமுக அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து, அமைச்சரும் கண்கலங்கி அழுதார்.