U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் UAE எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய UAE, 44 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியாவின் யுதாஜித் குகா 3 விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 16.1 ஓவரிலேயே 143 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் ஆயுஷ் 67, வைபவ் 76 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.