தெலங்கானா மாநிலத்தின் முழுகு மாவட்டத்தில் இன்று (டிச. 04) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.3 ரிக்டர் அளவில் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஐதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த உடனடி தகவல் இல்லை.