தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்ட மையத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை மாணவிகளின் பெற்றோர்கள் செருப்பால் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து வந்த பெற்றோரை பார்த்து சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடிய ஆசிரியரை பிடித்த பெற்றோர்கள் தாக்கியுள்ளனர். மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.