புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுவனை தெரு நாய் ஒன்று வெறித்தனமாக கடித்தது. இதில், முகத்தில் பலத்த காயமடைந்த அலறி துடித்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த நாயை விரட்டியதோடு, ஓடிச் சென்று சிறுவனை மீட்டனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.