உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அகற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மட்டுமே உதவுகின்றன. ஆனால் இவற்றை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். தாமாக உட்கொள்ளும் போது மூளையின் செயல்பாடு பாதிக்கும். மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின்படி 121 நாட்களுக்கு மேல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு, மூளையில் நரம்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் பார்க்கின்சன் நோய்க்கான ஆபத்து 29% அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.