வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ தேர்வு நடந்தது. இந்த தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் புருஷோத்தமன் (29), செல்போனை மறைத்து வைத்து காப்பியடித்து தேர்வு எழுதியதாக தெரிகிறது. இதனை அங்கிருந்த சிசிடிவி காட்சி மூலம் கண்காணிப்பாளர்கள் கவனித்து, புருஷோத்தமனை உடனடியாக வெளியேற்றினர். தொடர்ந்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.