வேலூர்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், ஜீப்பில் பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.