வேடசந்தூர் - Vedasandur

வேடசந்தூர்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆணைபட்டியைச் சேர்ந்தவர் வைரமணி, பக்கத்து ஊரான வேலபட்டியைச் சேர்ந்த மாதவராஜா என்பவருக்கும் வைரமணிக்கும் நிலப் பிரச்சனையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வைரமணியின் தோட்டத்திற்குச் சென்று மாதவராஜ் பிரச்சனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து வைரமணி புகார் அளித்தார். அதனைத் திசைதிருப்ப என் மீது வைரமணி ஜாதியைப் பற்றிப் பேசினார் என்று பொய்யான புகார் அளித்துள்ளார். குஜிலியம்பாறை காவல்துறையினர் முறையாக விசாரிக்காமல் பிசிஆர் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.  இதனை அறிந்து வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில அமைப்புச் செயலாளர் பந்தல்ராஜா தலைமையில் வேடசந்தூர் ஆத்துமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் முறையாக விசாரிக்காமல் பல்வேறு இடங்களில் பிசிஆர் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது, இதனால் அப்பாவி இளைஞர்கள், மற்றும் தொழிலதிபர்கள், காவல்துறையினர் வரை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவித்தனர். உடனடியாக தமிழக முதலமைச்சர் இதற்காக ஒரு குழுவை அமைத்து ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி பிறகு பிசிஆர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேடசந்தூர் குஜிலியம்பாறை ஒன்றிய வெள்ளாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా