திண்டுக்கல்லில் முன்னாள் வக்கீல் சங்க செயலாளர் உதயகுமார் தாக்கப்பட்டார். திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இரண்டாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதில் வழக்கறிஞர் சங்க செயலாளர் பாலமுருகன், சங்கத் தலைவர் சுரேஷ், பொருளாளர் பாண்டியராஜன், துணைச் செயலாளர் பகத்சிங், சுகுமார், செல்வராஜ், ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.