குஜிலியம்பாறை அருகே டிஎஸ்பி பவித்ரா அவர்களின் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சாலையின் ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்திருந்த நான்கு பேரை பிடித்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அய்யலூர் வேங்கனூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் கிருஷ்ணமூர்த்தி கௌதம் ரஞ்சித் ஆகிய நான்கு பேர் என்பதும் அவர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதும் தெரிய வந்தது. இதனை எடுத்து போலீசார் அவர்கள் எங்கெங்கு சந்தன மரங்களை வெட்டி உள்ளனர். வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.