வேடசந்தூர்: அரசு பள்ளியில் ஆண்டு விழா.. மாணவிகள் உற்சாகம்

50பார்த்தது
வேடசந்தூர்: அரசு பள்ளியில் ஆண்டு விழா.. மாணவிகள் உற்சாகம்
வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுமுறை எடுக்காமல் வந்த மாணவிகளுக்கும், ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும், பரிசு பெற்ற மாணவிகளின் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு மாணவிகளின் நாடகம் கிராமிய பாடல்களுக்கு நடனம் ஆகியவை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் உற்சாகத்துடன் தாங்களும் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி