வேடசந்தூர்: கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றவர் கைது

67பார்த்தது
வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால், முதல் நிலைக் காவலர் விஜய கண்ணன், காவலர் சுப்பிரமணி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்குள்ள சுடுகாடு அருகே அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த வெள்ளைய கவுண்டனூரைச் சேர்ந்த முத்து (வயது 46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை கைப்பற்றி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி