திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கலைஞர் நகரை சேர்ந்த மோகன் காந்தி, கவியரசி என்ற தம்பதியினரின் மகள் நிலானி 7வயது. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் நிலானி வேடசந்தூரில் உள்ள பரதநாட்டிய வகுப்பில் பரதம் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நிலானி ஒற்றை கையில் 30 பரதநாட்டிய முத்திரைகளை 30 வினாடிக்குள் சொல்லுவதற்கு கடும் பயிற்சி மேற்கொண்டார்.
நிலானி கடும் பயிற்சிக்குப் பிறகு 30 வினாடிகளில் பதாகம், திரிபதாகம், அத்தப்பதாகம், கத்தரி முகம், மயூரம், அர்த்தச் சந்திரன் உள்ளிட்ட 30 பரதநாட்டிய முத்திரைகளை சொல்லி உலக சாதனை படைத்தார்.
இந்த உலக சாதனை வேர்ல்ட் வைட் (WorldWide) என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.