வேடசந்தூர்: வாகன விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி

82பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டி காளணம்பட்டியைச் சேர்ந்தவர் விவேக். இவரது குழந்தைகள் அஸ்வந்த் வயது 7, சாய் அஸ்மிதா வயது 5.

இந்த நிலையில் விவேக் தனது குழந்தைகளுடன் வேடசந்தருக்கு சென்று விட்டு மீண்டும் காளணம்பட்டி நோக்கி திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது போடியிலிருந்து சேலம் நோக்கி சுருளிவேல் என்பவர் ஓட்டி சென்ற அரசு புறநகர் பேருந்து காக்காதோப்பூர் அருகே சென்ற போது விவேக் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனம் பேருந்தின் அடியே சிக்கிக் கொண்டு சிறிது தூரம் இழுத்துச் சென்றதால் விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விவேக்கின் குழந்தைகள் அஸ்வந்த், சாய் அஸ்மிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த குழந்தைகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் போலீசார் உயிரிழந்த விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த விவேக்கின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சாலையில் உருண்டு பிரண்டு கதறி அழுதது காண்பாரை கண்கலங்க செய்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி