வடமதுரை: போலி பத்திரங்கள் பதிவு செய்து மோசடி

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் வட மாதிரி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பத்திர அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பில் சார் பதிவாளர்களே பணி அமர்த்தப்படுகின்றனர் பல்வேறு பணிகள் ஆண்டு கணக்கில் கிடப்பில் கிடக்கிறது பத்துக்கு மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் உரிமம் பெற்று பத்திரம் தயார் செய்யும் பணியில் உள்ளனர் இதில் கோதண்டபாணி என்பவர் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இவர் பல்வேறு போலி பத்திரங்கள் தயாரித்ததாக ஏற்கனவே வழக்கு பதிவு நிலுவையில் உள்ளது. நிலையில் அயலூர் பகுதியில் 9 1/2 சென்ட் நிலம் பத்திரம் பதிய ரூபாய் 4 லட்சம் கேட்டு, பணத்தை கொடுத்தால் தான் பதில் தருவேன் என அலைக்கழித்து வருகிறார்.
இது போன்ற பகுதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே முறைகேடாக நடக்கும் பத்திர எழுத்து கோதண்டபாணியின் அலுவலகத்தை சீல் வைத்து அவரது லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டபடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்து மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி