வேடசந்தூர்: கிராம தலைவரின் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு

79பார்த்தது
வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60) கிராம தலைவராக உள்ளார். இவர் தலைமையில் கருக்காம்பட்டி எல்லை காளியம்மன் கோவில் அருகே ஊர் மக்கள் அனைவரிடமும் வசூல் செய்து திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்க கூறி சதீஷ் வயது 33 என்பவர் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் காவலுக்காக தனியாக படுத்திருந்த பழனிச்சாமி இடம் சென்ற சதீஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனிச்சாமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த கிராம மக்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் தகவல் அறிந்த கிராம மக்கள் சதீஷின் வீட்டிற்குச் சென்று அவரது காரை கல்லால் தாக்கி கண்ணாடிகளை உடைத்து காரை சேதப்படுத்தினர். சம்பவம் குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் இருதரப்பினர் இடமும் விசாரணை நடத்தி வருகிறார். கத்தியால் கழுத்தை அறுத்த சதீஷை வேடசந்தூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி