வேடசந்தூர்: வாகன விபத்தில் வட மாநிலத் தொழிலாளர் படுகாயம்

80பார்த்தது
வேடசந்தூர் அருகே உள்ள மாட்டாஸ்பத்திரி முன்பாக வடமாநில தொழிலாளர் விபத்தில் காயமடைந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வேடசந்தூர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் மருத்துவ உதவியாளர் பிரதீபா ஆகியோர் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பிரியதர்ஷினி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்பு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் காயம் அடைந்தவர் சுயநினைவு இல்லாததால் அவர் பெயர் என்ன, எங்கு வேலை செய்கிறார் போன்ற விவரங்கள் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி