வேடசந்தூர்: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம்

53பார்த்தது
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசாணை வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு எம்எல்ஏ காந்திராஜன் 2. 80 லட்சத்திற்கான உத்தரவு ஆணையை வழங்கினார். இதனை அடுத்து வேடசந்தூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்த வேடசந்தூர் கிட் ஜி ஃப்ரீ ஸ்கூல் குழந்தைகளை எம் எல் ஏ காந்தி ராஜன் பாராட்டி பரிசு வழங்கினார். இதில் பள்ளி தாளாளர்கள் ரியாஜ் மற்றும் தங்கவேல் முனியப்பன் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெயர் பழகியை சூட்டிய எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி