வேடசந்தூர் பேரூராட்சியின் சார்பில் அரசு கச்சேரி நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுடன் பிளாஸ்டிக் பை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு தாலுகா அலுவலகம் முன்பாக இருந்து பல்வேறு தெருக்களின் வழியாக விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்தினர். இதில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பை பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் நகரை தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.