அய்யலூர்: பொய்யான நீதிமன்ற உத்தரவு நடவடிக்கை எடுக்க கோரி மனு

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே உள்ள கெங்கையூர் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த வைரப் பெருமாள் என்பவர் அப்பகுதி பொதுமக்களிடையே ஊர் பொது சார்பாக உள்ள உரைக்கேணி மூடி உள்ளதாகவும் அவற்றைத் தூர்வார வேண்டும் என கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு அந்த புகார் மனுவை கெங்கையூர் காளியம்மன் கோவில் பகுதியில் நத்தம் புறம்போக்கில் உள்ள இந்த குடியிருப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் எனக் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவற்றை அப்புறப்படுத்தி தருமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவின் பேரில் அய்யலூர் பேரூராட்சி பகுதியில் குடியிருக்கும் பொது மக்களை வீடுகளை அகற்றித் தருமாறு உத்தரவிடுகிறது. ஆனால் அப்பகுதி பொதுமக்கள் எங்களை ஏமாற்றி கையொப்பம் இட்டும் போலியான கையெழுத்துக்கள் இட்டும் அந்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் வைரபெருமாள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிஅப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி