வேடசந்தூர்: எனது கிராம வளர்ச்சியில் எனது கனவுகள்

60பார்த்தது
வேடசந்தூர் அருகே உள்ள கூவக்காபட்டி ஊராட்சி கூவக்காபட்டியிலும், பாலப்பட்டி ஊராட்சி பாலப்பட்டியிலும் எனது கிராம வளர்ச்சியில் எனது கனவுகள் என்ற விழிப்புணர்வு உதவி எண்கள் பலகையை திறந்து வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய அரசின் ஆயோக் குழு உறுப்பினர் ரூபபாலன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி டாக்டர் திரிவேணி அவர்கள் தகவல் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார். வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். இதில் கல்வி இடைநீற்றல் இல்லாத கிராமம், குழந்தை தொழிலாளர் இல்லாத கிராமம், குறைந்தது ஒரு பட்டப் படிப் ஆவது படித்த பெண் குழந்தைகள் கொண்ட கிராமம், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத கிராமம், வளரிளம் பெண்களுக்கு பாதுகாப்பான கிராமம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சமுதாய நலக்குழு உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி நன்றி உரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி