திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த விவேக் தனது குழந்தைகள் அஸ்வத், சாய் அஸ்மிதா ஆகியோருடன் இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார். காக்காத்தோப்பு அருகே சென்றபோது போடியில் இருந்து வந்த அரசு பேருந்து இருசக்கரவாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பேருந்துக்கு அடியில் சிக்கிய இருசக்கரவாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.