நிலக்கோட்டை - Nilakottai

வத்தலக்குண்டு: வெள்ளைக்கார தாத்தாவின் நினைவு நாள்

வத்தலக்குண்டு: வெள்ளைக்கார தாத்தாவின் நினைவு நாள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்து தங்கள் ஊரில் தங்கி சேவை செய்து மறைந்த வெள்ளைக்கார தாத்தாவிற்கு அவரது உருவ சிலையுடன் ஊர்வலம் நடத்தி முளைப்பாரி எடுத்து வந்து நன்றி செலுத்திய கிராமத்து மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கிம்டன் கிறிஸ்தவ பாதிரியார் ஆன இவர் 1974 ஆம் ஆண்டு சேவை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி கிராமத்திற்கு வந்து தங்கி உள்ளார். அன்று முதல் சமூக ஆர்வலராக மக்களோடு மக்களாக கலந்து அவர்களது தேவைகளுக்காக சேவை செய்து வந்துள்ளார். கிராமத்து தெய்வங்களுக்கு திருவிழா எடுப்பது போல் கிராமம் முழுவதும் ஆங்காங்கே மண்டக படிகளை ஏற்படுத்தியும், முளைப்பாரிகளை போட்டும் திருவிழா போல் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நினைவு நாள் அன்று அலங்கரிக்கப்பட்ட மின்னலங்கார தேரிலும் பல்லக்கிலும் ஜேம்ஸ் கிண்டனின் உருவச் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கிராமத்து பெண்கள் கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரிகளை ஊர்வலத்தில் எடுத்து வந்தனர். கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களும் மலர் தூவி வரவேற்று ஜேம்ஸ் கிம்டன் உருவ சிலையை சுமந்து வந்தனர். இதனை தொடர்ந்து சமத்துவ கொடை விழா ஊர்வலம் இறுதியாக ஜேம்ஸ் கிம்டன் நினைவிடத்தில் முடிந்தது

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా