கொடைக்கானல் மூளையார் பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியதாவது மூளையார், வடகரப்பாறை, வலாங்குளம், வாழைகிரி ஆகிய பழங்குடியினர் கிராமங்களில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமமான மூளையாரில் உள்ள மதுக்கடை மற்றும் பார் நடத்துவதால் எங்கள் கிராமத்தில் பெண்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறோம்.
குறிப்பாக இளம் வயதில் கணவர்களை இழப்பது, கல்வி பயிலும் வயதில் மது போதைக்கு அடிமை ஆவது மற்றும் கிராமங்களில் இரவு நேரங்களில் தொந்தரவு செய்வது போன்ற பல விஷயங்களுக்கு உள்ளாகிறோம். இது மட்டுமின்றி அருகில் உள்ள கிராமமான வடகரப்பாறை, மூளையூர், மச்சூர் போடுற கிராமங்களும் இதே நிலையில் உள்ளது. வலாங்குளம் செல்லும் விவசாயிகள் மற்றும் கோழி தொழிலாளர்களும் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.
எங்கள் கிராமத்தின் அருகில் முருகன் திருக்கோவில் உள்ளது, கோவிலுக்கு வருபவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடையை மாற்று இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த பெண் மதுக்கடையை அகற்றி எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.