நிலக்கோட்டை - Nilakottai

நிலக்கோட்டை: நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மைக்கேல் பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  2025-2026 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 305 ஊராட்சிகளில் 7,187 இடங்களில் சுமார் 5,95,437 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் சார்பில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், அழகர்கோவில், நத்தம், சிறுமலை, அய்யலூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  அதன்படி, 2025-2026ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 57,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சவர்ணம், பத்மாவதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా