வத்தலகுண்டு விராலிப்பட்டி நான்கு வழி சந்திப்பில், அனுமதியின்றி கிறிஸ்தவ சபை கட்டடம் ஒன்று செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமையில் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டுள்ளது.
புகாரில், விராலிப்பட்டி குரும்பபட்டி பகுதியில் உள்ள நான்கு வழி சந்திப்பில் அனுமதி இன்றி வாடகை கட்டிடத்தில் கிறிஸ்தவ சபை வைத்து அப்பகுதியில் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இதனால் இந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை கூறும்போது விராலிப்பட்டி பகுதியில் இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதியானதால் இங்கே கிறிஸ்துவ அமைப்பு ஒன்று வாடகை கட்டிடத்தில் சபை ஒன்று நடத்துகிறார்கள் இதனால் இப்பகுதியில் தீவிர மதமாற்றம் நடைபெற்று வருகிறது ஆகவே இதை தடுக்க வேண்டும் என வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் மேலும் இது குறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமியிடம் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.