சித்தரேவு: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

77பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தரேவு பேருந்து நிறுத்தம் பகுதி வழியாக கொடைக்கானல், பன்றிமலை, ஆடலூர் ஆகிய மலைப்பகுதிகளுக்கும் அய்யம்பாளையம், வத்தலகுண்டு, சித்தையன் கோட்டை, ஆத்தூர், செம்பட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் சித்தரேவு பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் போக்குவரத்திற்கு இடையூறாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் அப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பாக கடந்த சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டதின் பேரில் ஒரு சிலர் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை கோட்ட உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் உதவி பொறியாளர் பரத் ஆகியோர் தலைமையிலும் வருவாய் ஆய்வாளர் சர்மிளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலையில் சித்தரேவு பகுதியில் சாலையின் இருபுறமும் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி