தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கான செய்முறை பயிற்சி தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல், தாவரவியல், பொது இயந்திரவியல், புதுவேலை வாய்ப்பு திறன் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செயல்முறை பயிற்சி தேர்வு நடைபெற்றது. இதில் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று செயல்முறை பயிற்சி தேர்வினை எழுதி வருகின்றனர். பல பிரிவுகளாக தொடங்கியுள்ள செயல்முறை பயிற்சி தேர்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.