நிலக்கோட்டை: வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

67பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகம் ஜெ. மெட்டூர் கிராமத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா மற்றும் வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வன உயிரினங்களை வேட்டையாடுதல் மற்றும் வேட்டையாடும் நோக்கில் ஆயுதங்களுடன் வனத்தினுள் நுழைதல் வன உயிரினச் சட்டம் 1972 இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும், வன நிலங்களை ஆக்கிரமித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும், வன உயிரினங்களுக்கு உணவளித்தல் குற்றமாகும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும், வன உயிரினங்களை வேட்டையாடுவதை தவிர்த்து யாரும் வேட்டையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக வனப்பகுதியை பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகும் என அப்பகுதி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் நிலக்கோட்டை வனச்சரக அலுவலர் அருண்குமார், ஒருங்கிணைந்த மேம்பாட்டு வனச்சரக அலுவலர் சிவா, வன மற்றும் வன உயிரின குற்றம் கட்டுப்பாட்டு பிரிவு வனச்சரக அலுவலர் சதீஷ்குமார், சிறுமலை வனச்சரக பணியாளர்கள், சமூக வனக்கோட்ட வனப் பணியாளர்கள், வன மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு பணியாளர்கள் இணைந்து ஜெ. மெட்டூர் கிராமத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி