கொடைக்கானலில் வழக்கத்துக்கு மாறாக உறைபனி சற்று தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது, பருவ நிலை மாற்றத்தினால் மழை மற்றும் அடர்பனி மூட்டம் நிலவிய நிலையில் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை நிலவி வருவதாலும் மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.