கொடைக்கானல்: குழந்தை வேலப்பர் திருக்கோயில் தேர் பவனி

78பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 25-கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறை கிராமத்தில் அமைந்திருக்கிறது
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் உள்ளது
இந்திருக்கோவிலானது அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உபகோயில் ஆகும்

இத்திருக் கோவிலில் உள்ள முருகன் பெருமானின் சிலையானது நவபாஷாணங்களைக் கொண்டு போகர்களால் செய்யப்பட்ட சிலை 3000 ஆண்டுகளுக்கு மேலாக பிரசித்தி பெற கோவிலில் குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்றாகும்

இந்நிலையில் தேர் திருவிழா தொடங்கியது
தேர் இழுப்பதற்கு முன்பு பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் நின்று தங்களின் நேர்த்திக்கடன் களை நேர்ந்து தேருக்கு முன்னிலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மலைகளில் இழுக்கப்படும் தேர்களின் பெரிய தேர் இதுவாகும் இங்கு இழுக்கப்படும் தேருக்கு முன்னும் பின்னும் வடம் போட்டு பக்தர்கள் தேர் இழுக்கும் காட்சி காண்போரின் கண்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் இந்தத் தேர் திருவிழாவிற்கு கொடைக்கானல் மேல்மலை
கீழ் மலை கிராம பொதுமக்களும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஜாதி மத பேதம்யின்றி இந்த தேர் திருவிழாவில் பங்கு பெற்று தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டு முருகனின் அருள் பெற்று செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி