நத்தம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று(செப்.19)மாலை கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதைப்போலவே சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.