நத்தம்: வார சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வாரச் சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆடு வளர்ப்பவர்கள், ஆட்டு வியாபாரிகள் வருவது வழக்கம். நத்தம் மலை சார்ந்த  கிராமங்கள் அதிகம் கொண்ட ஊர்  இதனால் மலைகளில்  வளர்க்கப்படும் ஆடுகளின் கறியின் சுவை  நன்றாக இருக்கும் என்று  கூறுவார்கள் இதனாலேயே நத்தம் வார சந்தைக்கு எப்போதுமே மவுசு அதிகமாக உள்ளது

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை  கொண்டாடப்பட உள்ள நிலையில் நத்தம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டியது. ஆட்டுச்சந்தையில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள்  குவிந்தன.
இதில் மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திருப்பூர், தஞ்சாவூர், உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் லாரி லாரியாக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கி சந்தையில் 7ஆயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை எடைக்கு தகுந்தாற் போல் ஆயிரக்கணக்கான ஆடுகளின் விற்பனை ஜரூராக உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக ஆடுகள் 2ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செ ய்யப்படுவதாக கூறப்படுகிறது. இன்று ஒரேநாளில் நத்தம் வார சந்தையில் 1கோடி  ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது இது ஆடு வளர்க்கும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி