பாலக்கோடு: 3 குழந்தைகளின் தாய் கடத்தல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் கேத்தன அள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் லாரி ஓட்டுநர். இவரது மனைவி வசந்தி, இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். முனிராஜ் வாரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று(அக்.26), முனிராஜ் பெங்களூருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் வசந்தி இல்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி காரிமங்கலம் காவல் நிலையத்தில் இன்று(அக்.27) புகாரளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவர் எனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.