தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொருவரும் திங்கட்கிழமை நாட்களில் பிற்பகல் நேரத்தில் தேங்காய் விற்பனைக்கு மாவட்ட அளவிலான பிரசித்தி பெற்ற தேங்காய் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று அக்டோபர் 21 பிற்பகல் கூடிய வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் நேற்று சுமார் 1. 50 இலட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. காய்களின் அளவிற்கேற்ப 8 ரூபாய் முதல் 22 ரூபாய் வரையிலான விலையில் தேங்காய் விற்கப்பட்டது. பண்டிகை நாட்கள் வருவதை ஓட்டி தேங்காய் விலை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று 20 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.