தர்மபுரி: தமிழியக்கம் சார்பில் பெரியார்&அண்ணா பிறந்தநாள் விழா

69பார்த்தது
தமிழியக்கம் சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா தர்மபுரி பச்சமுத்து மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு தமிழியக்க நிறுவனத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக நிறுவன தலைவருமான கோ. விசுவநாதன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் அதியமான் வரவேற்றார். பச்சமுத்து கல்வி நிறுவனங்களில் தலைவர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் 1800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கோ. விசுவநாதன் பேசியதாவது, கிரேக்கம், இலத்தீன் மொழிகள் மாறி ஐரோப்பிய மொழிகளாக மாறிவிட்டன. உலகத்திலேயே மாறாமல் இருக்கக்கூடிய ஒரே மொழி தமிழ் மொழி தான். இந்தியாவிலேயே அதிகமாக பெண் விடுதலைக்கு பாடுபட்டவர் தந்தை பெரியார் தான். அறிஞர் அண்ணா அரசியல் நாகரிகத்தை கடைப் பிடித்தார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அண்ணா இருந்தார். தமிழியக்கம் எல்லோருக்கும் பொதுவான இயக்கம். சாதி, மதம், கட்சிக்கு அப்பாற்பட்ட இயக்கம் தமிழியக்கம். தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தங்களுடைய பெருமையை உணர வேண்டும் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி