தவெக தலைவர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் பேசும் போது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திமுக என இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா, “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கொள்கை அளவில் தெளிவில்லாமல் இருக்கிறார், பெரியாரை அவர் கையில் எடுத்திருப்பதிலிருந்தே அது தெரிகிறது” என்றார்.